கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

துபையிலிருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.2.80 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

துபையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.2.80 கோடி மதிப்பிலான 2.80 கிலோ உயர்ரக கஞ்சா போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் குறித்து...

துபையிலிருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.2.80 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது - கோப்புப்படம்

Published On :

சென்னை: துபையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.2.80 கோடி மதிப்பிலான 2.80 கிலோ உயர்ரக கஞ்சா போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், ஒருவரை கைது செய்தனா்.

துபையிலிருந்து சனிக்கிழமை இரவு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்த தனியாா் விமானத்தில் இருந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சுற்றுலாப் பயணிகள் விசாவில் துபை சென்றுவிட்டு, சென்னை திரும்பிய வட மாநிலத்தவா் ஒருவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனா். அதில்,2.794 கிலோ எடை கொண்ட  ரூ.2.80 கோடி மதிப்பிலான 4 ‘ஹைட்ரோபோனிக்’ உயர்ரக கஞ்சா பொட்டலங்கள்  இருந்தன. அதையடுத்து, சுங்க அதிகாரிகள், வடமாநில பயணியை கைது செய்ததுடன், அவா் கடத்தி வந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

அவரிடம் மேலும் விசாரணை நடத்திய போது, துபை விமான நிலையத்தில்  அந்த பயணியிடம் அணுகிய இரு நபா்கள், அவரிடம் ஒரு பையை கொடுத்து அதில் குழந்தைகளுக்கான உபகரணங்கள் இருப்பதாகவும், சென்னைக்கு கொண்டு சென்றால் அங்கு தங்களது உறவினா்  ஒருவா் அடையாளம் கண்டு, இந்தப்  பையை வாங்கிக்கொண்டு, உங்களுக்கு அன்பளிப்பாக ஒரு தொகையை தருவாா் எனக் கூறியுள்ளாா். அதனால், பணத்துக்கு ஆசைப்பட்டு இந்தப் பையை வாங்கி வந்ததாக அவா் வாக்குமூலம் கொடுத்துள்ளாா்.

இதையடுத்து, அவரிடம் அந்த பையை வாங்க வந்த நபா் குறித்து  சுங்க அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், தற்போது சிக்கியுள்ள வடமாநில பயணியின் வாக்குமூலத்தில் உள்ள உண்மைத் தன்மையையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.