16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

துண்டுச் சீட்டுக்கு அடிபணிபவன் நான் அல்ல: ஜேசிடி பிரபாகர்

எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன் என என சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளது குறித்து...

JCd Prabhakar

ஜே.சி.டி. பிரபாகர் - எக்ஸ்

Published On :

எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன் என என சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று (செப். 14) தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய்யின் பொறுப்பில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான முதல்வரின் பதிலுரைக்குப் பிறகு எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்க வேண்டும் எனக்கூறி, திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

முன்பு எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்குமாறு முதல்வர் விஜய் கூறிய நிலையில், சிறிது நேரத்திற்குப் பிறகு திமுகவினர் பேச சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அனுமதிக்கவில்லை.

துண்டுச் சீட்டு கொடுக்கப்பட்ட பிறகே சட்டப்பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், நெல்லையில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் ஜேசிடி பிரபாகர் பேசியதாவது:

''நான் எந்த அழுத்தத்திற்கும் அடிபணியவில்லை. முதல்வர் விஜய் பேசுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

நான் பேசுவதற்குரிய வாய்ப்பை மறுக்கவில்லை. நேரலையில் பார்த்தவர்களுக்கு அது தெரியும். நான் பேசுவதற்கு வாய்ப்பு அளித்தபோதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏன் பேசவில்லை என்பதற்கான விளக்கத்தை நான் எப்படி பெற முடியும்.

யாரையும் வெளியே அனுப்புவது எனது நோக்கம் அல்ல. அப்படி நடந்தால் அதற்கு வருத்தப்படக்கூடிய இடத்தில்தான் நான் இருக்கிறேன்.

எந்த துண்டுச் சீட்டுக்கும் நான் அடிபணியமாட்டேன். துண்டுச் சீட்டுக்கு பயந்தவன் நானில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கிறேன்.

என் துறை சார்ந்த குறிப்புகளை என் குழுவிடமிருந்து பெறுவதற்காக மட்டுமே எனக்கு துண்டுச் சீட்டு கொடுக்கப்பட்டது'' எனக் குறிப்பிட்டார்.

Summary

I will not bow to the slip of paper JCd Prabhakar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER