நீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசுபயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டுகாய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைபேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பேசாப் பொருளைப் பேசத் துணிந்தவர் பாரதி: தினமணி ஆசிரியர்

பேசாப் பொருளை துணிந்து பேசியவர் மகாகவி பாரதி என தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தெரிவித்தார்.

Published On :

பேசாப் பொருளை துணிந்து பேசியவர் மகாகவி பாரதி என தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வளாகத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞர்கள் சங்கத்தின் (எம்.எம்.பி.ஏ.) தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதியார் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில், 'பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்' என்ற தலைப்பில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேசியதாவது: மகாகவி பாரதியாரின் வாழ்க்கையில் வழக்குரைஞர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய பாரதியை சென்னைக்கு அனுப்பிய பெருமை வழக்குரைஞரான கோபாலகிருஷ்ண ஐயரைச் சாரும்.

அதேபோல, பாரதியார் கடலூர் சிறையிலிருந்து மீண்டு வர முயற்சி எடுத்தவர்கள் வழக்குரைஞர்களே. அவர்களில் மிக முக்கியமானவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது இந்திய தலைமை நீதிபதியாக (பொறுப்பு) இருந்த மகான் மணி ஐயர் என்கிற சுப்பிரமணிய ஐயர்.

மகாகவி பாரதியாரின் தேசிய கீதங்கள் புத்தகம் வெளியிட பேருதவி செய்தவர் கிருஷ்ணசாமி ஐயர். இதேபோல, வழக்குரைஞர்கள் பலர், பாரதியின் வாழ்க்கையில் பல நேரங்களில் உதவியிருக்கிறார்கள்.

பாரதியார் தெரிவித்த பேசாப் பொருள் என்பது இறைப் பரம்பொருள். எங்கும் நிறைந்த இறைப் பரம்பொருள் குறித்து நான் பேசத் துணிந்தேன் என்கிறார் பாரதியார். இதேபோல, கேட்கா வரத்தை கேட்கத் துணிந்தேன் என அவர் குறிப்பிட்டது, மண், புழு, பூச்சி உள்ளிட்ட பல்லுயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் இறைவா என்கிற வரம்.

பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் என்கிற வரி பாரதியாரின் விநாயகர் நான்மணி மாலையில் வரும் 32-ஆவது பாடல். இதேபோல இன்னும் பல பாடல்களில் தனக்காக கேட்காமல் ஒட்டுமொத்த உலகத்துக்காகவும் வரம் கேட்டவர் பாரதியார்.

இவை மட்டுமல்லாமல், அந்தக் காலகட்டத்தில் யாரும் பேசத் துணியாத பல பொருள்கள் குறித்துப் பேசத் துணிந்தவர் பாரதி. பெண் விடுதலை குறித்து கடந்த நூற்றாண்டில் முதல் தசாப்தத்தில் முதல் குரல் கொடுத்தவர் அவர். ஜாதி வேறுபாடுகளைக் களையவும், பெண் விடுதலைக்காகவும் அவர் காலத்தில் பேசப்படாத, பேசத் துணியாத பல பேசாப் பொருள்கள் குறித்து பாரதி துணிந்து பேசியிருக்கிறார் என்றார் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்.

நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சொ. அருள்வடிவேல் (எ) சேகர் தலைமை வகித்துப் பேசினார்.

மூத்த வழக்குரைஞர் டி.எஸ்.ஆர். வேங்கடரமணா, கவிஞர் காசி முத்துமாணிக்கம், புரட்சிப்பாவலர் மன்றத் தலைவர் பி. வரதராஜன், அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் சரவணன், வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.

எம்.எம்.பி.ஏ. தமிழ் இலக்கிய மன்ற உறுப்பினர் க. உமா மகேஸ்வரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தமிழ் இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் வெ. ஜானகிதேவி சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

முன்னதாக, தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் ந. தமிழ்மணி வரவேற்றார். எம்.எம்.பி.ஏ. பொதுச் செயலர் பா. ஜெஸி ஜீவ பிரியா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.