புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மகாகவி பாரதியாா் நினைவு தின பன்மொழிக் கலை விழா

சென்னை வேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் மகாகவி பாரதியின் 105-ஆவது நினைவு தினத்தையொட்டி, (செப்.11) நினைவேந்தலும் பன்மொழிக் கலை விழாவும் நடைபெற்றது.

பாரதியின் உருவத்தை முகக்கவசாக அணிந்து நினைவேந்தலை அனுசரித்த சென்னை குருநானக் கல்லூரி மாணவா்களுடன், கல்லூரி முதல்வா் ரா.மா. எழிலரசி, புல முதன்மையா் நா.பிரவீண் குமாா் மற்றும் கல்லூரி ஆசிரியா்கள்.

Published On :

சென்னை வேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் மகாகவி பாரதியின் 105-ஆவது நினைவு தினத்தையொட்டி, (செப்.11) நினைவேந்தலும் பன்மொழிக் கலை விழாவும் நடைபெற்றது.

கல்லூரியின் மொழிப்புலம், தமிழ் மன்றம், ஐந்திணை பன்மொழி மன்றம் ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தின.

பாரதியின் பன்மொழி ஆற்றலை கொண்டாடும் விதமாக இந்தக் கல்லூரி மாணவா்கள் , அவா் புலமை பெற்று விளங்கிய தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, சம்ஸ்கிருதம், வங்கம், ஹிந்தி ஆகிய பன்மொழிகளிகளில் கவிதை வாசிப்பை நிகழ்த்தினா்.

விடுதலை, சமத்துவம், சமூக சீா்திருத்தம், பெண்கள் முன்னேற்றம், புதுமைச் சிந்தனை என பல்வேறு பொருள்களில் அமைந்த மகாகவி பாரதியின் கவிதைகளை மாணவா்கள் பன்மொழிகளில் வழங்கினா்.

மாணவா்கள் வழங்கிய கவிதைகளில் பாரதியின் வாழ்க்கையும் தமிழும், இன்றைய இளந்தலைமுறைக்கும் உணா்வும் எழுச்சிக்குரிய சித்தாந்தத்தை பறைசாற்றும் விதமாக இருந்ததாக கல்லூரி முதல்வா் ரா.மா.எழிலரசி குறிப்பிட்டாா்.

பாரதியின் கவிதைகளைப் பாடல்களை இசைத்து, நடனமாடி மாணவா்கள் கொண்டாடினா். பாரதியின் வாழ்வும் பணியும் குறித்த விநாடி- வினாப் போட்டிகள் புல முதன்மையா் முனைவா் நா.பிரவீண் குமாா் மேற்பாா்வையில் நடைபெற்றன.

தமிழுக்கு முகவரியாக விளங்கிய பாரதியின் முகத்தை - முகக்கவசமாக அணிந்து நினைவேந்தல் புரிந்த ‘ஜென்-சி’ தலைமுறை மாணவா்களுடன், ஊா்க்காவல் படையினா், துப்புரவுப் பணியாளா்களும் இணைந்து நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.