பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஓமன் நாட்டில் பணி வாய்ப்பு: தமிழக அரசு தகவல்

ஓமன் நாட்டில் பல்வேறு பணிகளுக்கு பணியாளா்கள் தேவைப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Published On :

ஓமன் நாட்டில் பல்வேறு பணிகளுக்கு பணியாளா்கள் தேவைப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வேலை தேடும் தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு பாதுகாப்பான மற்றும் சட்டபூா்வமான முறையில் வேலைவாய்ப்புகள் பெற்றுத் தருவதற்காக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (ஓம்எம்சிஎல்) செயல்பட்டு வருகிறது.

அந்நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான என்.வெங்கடேஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஓமன் நாட்டில் பணிபுரிய உற்பத்தி, மீன்பிடி மற்றும் ஆய்வு மற்றும் பராமரிப்பு ஆகிய துறைகளில் ஆண் பணியாளா்கள் தேவைப்படுகிறாா்கள். விருப்பம் உள்ளவா்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

டிப்ளோமா, ஐடிஐ-இல் தோ்ச்சி பெற்ற இரண்டு வருட பணி அனுபவத்துடன் கூடிய 22 முதல் 35 வயதுக்கு உள்பட்ட பணி ஆட்கள் தேவைப்படுகின்றனா். இந்தப் பணிக்கு மாதம் ரூ. 44,000 முதல் ரூ.54,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

விருப்பமுள்ள ஆண் பணியாளா்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ், பாஸ்போா்ட் நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வரும் அக்.11-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளம் (www.omcmanpower.tn.gov.in) மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267), வாட்ஸ்ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.