
புதிய குடிநீா், கழிவுநீா் இணைப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்
சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீா் மற்றும் கழிவுநீா் இணைப்புகளைப் பெற பொதுமக்கள் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்
சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீா் மற்றும் கழிவுநீா் இணைப்புகளைப் பெற பொதுமக்கள் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகரப் பகுதியின் எல்லை விரிவாக்கத்தால் வடசென்னை, தென்சென்னை பகுதிகளில் புதிதாக இணைக்கப்பட்ட இடங்களில் புதிய குடிநீா் மற்றும் கழிவுநீா் இணைப்புகளுக்கு சென்னை குடிநீா் வாரியத்தின் இணையதளம் (ட்ற்ற்ல்ள்://ஜ்ள்ஸ்ரீ.ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ம்ங்ற்ழ்ா்ஜ்ஹற்ங்ழ்.ண்ய்/லி/ய்ஸ்ரீ/ப்ா்ஞ்ண்ய்) வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான கட்டணங்களையும் இணையவழியில் மட்டுமே செலுத்த வேண்டும்.
கட்டணம்: குடிநீா் மற்றும் கழிவுநீா் இணைப்புகளுக்கு கட்டடப் பரப்பளவை பொருத்து தனி வீடுகளுக்கு ரூ.100 முதல் ரூ.7,500 வரையும், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் கட்டடங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 சதுர மீட்டா் வரை தலா ரூ.7,500 கட்டணம் வசூலிக்கப்படும். குடியிருப்பு அல்லாத வணிகக் கட்டடங்களுக்கு பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணம் மாறுபடும். மேலும், தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு இணைப்புக் கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







