மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக முப்பெரும் விழா!
திமுகவின் முப்பெரும் விழா இன்று நடைபெறுவது குறித்து...

அண்ணா அறிவாலயம் - கோப்புப் படம்
சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (செப். 19) கட்சியின் முப்பெரும் விழா நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. அண்ணா, பெரியார் பிறந்தநாளுடன் திமுக தொடங்கப்பட்ட நாளும் இம்மாதத்தில் வருவதால், ஆண்டுதோறும் இம்மாதத்தில் திமுக முப்பெரும் விழா நடத்தி வருகிறது.
இந்த விழாவில் கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியோருக்கு திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்பட உள்ளன.
முன்னதாக, கடந்த செப். 15 ஆம் தேதியிலேயே முப்பெரும் விழா நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்தச் சமயத்தில் மு.க. ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக, முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் மறுதேதி அறிவிக்கப்பட்டு, சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (செப். 19) மாலை 5 மணியளவில் திமுக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.
Summary
DMK's Mupperum Vizha today under the leadership of MK Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






