இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்காலிக அரசுப் பணி ஆணை!வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!ஃபென்ஜால் புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவு!ஒரே நாளில் 8 கொலைகள்; தவெக அரசுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய பிரேமலதா!சிப்காட், என்.எல்.சி சுரங்கத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தல்: அன்புமணி கண்டனம்!ஆசிய விளையாட்டு: வெள்ளி வென்றார் இளவேனில்!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் வெடிப்பு: மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது தொடர்பாக....

mettur

மேட்டூா் அனல் மின் நிலையம் - கோப்புப்படம்

Published On :

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் முதல் பிரிவில் இரண்டவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 840 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600 மெகா வாட் திறன் கொண்ட ஒரு அலகு செயல்பட்டு வருகிறது.

இதன்மூலம் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

முதல் பிரிவில் 2 வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. பழுது நீக்கும் பணியில் பொறியாளர்களும் பணியாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மாலைக்குள் பழுது நீக்கப்பட்டு, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று மேட்டூர் அனல் மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Summary

Power generation of 210 MW was affected at the Mettur Thermal Power Station due to a burst in a boiler tube in Unit 2 of the first section.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.