
பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை! முதல்வர் அறிவிப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக பாட்மின்டன் வீரர் ஹரிஹரனுக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது குறித்து...

முதல்வர் விஜய், பாட்மிண்டன் வீரர் ஹரிஹரன் - கோப்புப் படம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக பாட்மின்டன் வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் புதன்கிழமை (செப். 23) அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பாட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பாட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
அவரது திறமையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 'ELITE Sportsperson Scheme' திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுவரும் ஹரிஹரனின் இந்த சாதனை, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.
விளையாட்டு வீரர்களின் கனவுகளுக்கு தமிழ்நாடு அரசு என்றும் தோள்கொடுக்கும். ஹரிஹரன் மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
à®à®ªà¯à®ªà®¾à®©à®¿à®²à¯ நà®à¯à®ªà¯à®±à¯à®±à¯à®µà®°à¯à®®à¯ à®à®à®¿à®¯ விளà¯à®¯à®¾à®à¯à®à¯à®ªà¯ பà¯à®à¯à®à®¿à®¯à®¿à®²à¯, பà¯à®à¯à®®à®¿à®£à¯à®à®©à¯ à®à®à®µà®°à¯ à®à¯à®´à¯à®ªà¯ பிரிவில௠வà¯à®£à¯à®à®²à®ªà¯ பதà®à¯à®à®®à¯ வà¯à®©à¯à®±à¯ à®à®¾à®¤à®©à¯ பà®à¯à®¤à¯à®¤à¯à®³à¯à®³ à®à®¨à¯à®¤à®¿à®¯ à®à®à®µà®°à¯ à®à®£à®¿à®à¯à®à¯à®®à¯, à®à®µà¯à®µà®£à®¿à®¯à®¿à®²à¯ à®à®à®®à¯à®ªà¯à®±à¯à®±à¯à®³à¯à®³ தமிழà¯à®¨à®¾à®à¯à®à¯à®à¯ à®à¯à®°à¯à®¨à¯à®¤ பà¯à®à¯à®®à®¿à®£à¯à®à®©à¯ வà¯à®°à®°à¯ திரà¯.ஹரிஹரன௠à®à®µà®°à¯à®à®³à¯à®à¯à®à¯à®®à¯ à®à®©à®¤à¯ நà¯à®à¯à®à®¾à®°à¯à®¨à¯à®¤ வாழà¯à®¤à¯à®¤à¯à®à®³à¯â¦ pic.twitter.com/4WpmcLWXMe
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 23, 2026
Summary
Chief Minister Vijay announced an incentive on Wednesday (Sept. 23) for Hariharan, the badminton player from Tamil Nadu who won a bronze medal at the Asian Games.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





