
அக். 10ல் சென்னை வருகிறார் ராகுல் காந்தி! முதல்வர் விஜய்யைச் சந்திப்பாரா?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சென்னை வரவுள்ளது பற்றி...

கோப்புப் படம் - ANI
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகிற அக். 10 ஆம் தேதி சென்னை வரவுள்ளவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, 'மாணவர்கள் குரல்' என்ற தலைப்பில் ஒவ்வொரு மாநிலமாகச் சென்று மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். இந்திய கல்வி அமைப்பில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் வகையில் ராகுல், இந்த சந்திப்பை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சென்னையிலும் ஒரு மாணவர்கள் சந்திப்பை மேற்கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்து வருகிறது.
அதன்படி வருகிற அக். 10 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை தீவுத்திடலில் நடைபெறும் மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
ராகுல் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொள்ளும் வகையில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
முதல்வர் விஜய்யைச் சந்திப்பாரா?
தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு, தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள நிலையில், சமீபமாக யார் பிரதமர் வேட்பாளர்? என்று இரு கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ் கட்சியினர் கூற, தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் வேண்டும் என்று தவெகவினர் கூறி வருகின்றனர்.
இதனிடையே, ராகுல் காந்தி சென்னை வரவுள்ள நிலையில் தமிழக முதல்வர் விஜய்யைச் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக தவெக அரசு பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி கலந்துகொண்டார், பதவியேற்ற பிறகு கடந்த ஜூன் மாதம் முதல்வர் விஜய் தில்லி சென்றபோது, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Rahul Gandhi visits chennai on oct 10 to meet students
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






