கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு அவகாசம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு அவகாசம் அளிக்கப்பட்டிருப்பது பற்றி...

ஆம்ஸ்ட்ராங் - கோப்புப்படம்

Published On :

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், சாட்சிகள் மீது தங்களின் செல்வாக்கை செலுத்துவார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்று சிபிஐயிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் புதன்கிழமை கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கோரிய தகவல்களுடன் புதிய நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய சிபிஐக்கு 4 வாரமும், இதற்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பதிலளிக்க 2 வாரமும் அவகாசம் வழங்கி, விசாரணையை நவ.3 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

முன்னதாக, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் அருண் பள்ளி ஆகியோர் அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செப். 9-ஆம் தேதியிட்டு சிபிஐ தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையை நீதிபதிகள் பரிசீலித்தபோது, சிபிஐ வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: 2024 ஜூலை 5-இல் பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் 30 பேர் மீது சென்னை காவல் துறை அக்.1-இல் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த நிலையில், சென்னை காவல் துறை இந்த வழக்கை விசாரிப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் தொடர்ந்த வழக்கில், காவல் துறையின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு 2025, செப்.24-இல் மாற்றி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், கடந்த ஜூலை 22-ஆம் தேதி அந்த மேல்முறையீட்டு மனுவை மாநில அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரில் இருவர் இறந்துவிட்டனர், இருவர் தலைமறைவாகிவிட்டனர், 10 பேர் நீதிமன்ற காவலில் உள்ளனர். 16 பேருக்கு அமர்வு நீதிமன்றம் வழங்கிய பிணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதில் 12 பேரின் பிணையை ரத்து செய்து அவர்கள் நீதிமன்றத்தில் சரணடைய பிப்.27-இல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு எதிராக தொடர்புடைய 12 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் மார்ச் 12-இல் தடை விதித்தது.

இந்த வழக்கில் தற்போதுதான் சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பிணை பெற்ற பெரும்பாலானோர் குற்றப் பின்னணியும், அதிக செல்வாக்கும் கொண்டவர்கள். இவர்கள் சாட்சிகளை மிரட்டவும், தலைமறைவாகவும் வாய்ப்புள்ளது.

எனவே, நியாயமான விசாரணைக்கு அவர்களை மீண்டும் காவலுக்கு அனுப்புவது அவசியமானது. உயர்நீதிமன்றம் வழங்கிய 6 மாத அவகாசத்திற்குள் விசாரணையை முடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக சிபிஐ அதன் நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.