அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

அதிமுகவுடன் தவெக இணைகிறதா? இரட்டை இலையில் விஜய் போட்டியிடுவாரா? முன்னாள் அமைச்சர் கேள்வி

தவெகவை அதிமுகவுடன் இணைக்குமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்து...

Vijay | Edappadi Palaniswami

விஜய் | எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Published On :

அதிமுகவுடன் தவெகவை இணைத்து விடுமாறும், முதல்வர் விஜய்யை அதிமுக பெயரில் தேர்தலில் போட்டியிடுமாறும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இரட்டை இலையும் விசிலும் ஒன்றுதான் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, "வாக்குகளைச் சேகரிக்கவே அவர்கள் (தவெக) இப்படி பேசுகின்றனர். இவற்றையெல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள்.

அதிமுகவும் தவெகவும் வேறுவேறு இல்லையென்றால், தவெகவை அதிமுகவுடன் இணைத்து விடுங்கள். எங்களுடன் இணைந்து விடுங்கள். அதிமுகவின் பெயரில் நீங்கள் தேர்தல் போட்டியிடுங்கள்.

விஜய்யையும் எங்களுடன் சேரச் சொல்லுங்கள். நாங்கள் மறுப்போ எதிர்ப்போ எதுவும் தெரிவிக்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தவெக சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தில் அவர் பேசுகையில், "இட்டை இலையும் (அதிமுக) விசிலும் (தவெக) ஒன்றுதான். ஆகையால், திமுகவை புறக்கணித்து இரட்டை இலைக்கு வாக்களிப்பவர்கள்கூட விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில்தான், ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

Summary

Former AIADMK Minister Jayakumar has called for the merger of TVK with the AIADMK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.