டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க முடியாது! புதிய தலைமைச் செயலக விவகாரத்தில் ஜெயக்குமார்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் குறித்து ஜெயக்குமார் பேசியது பற்றி..

Jayakumar

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் - file photo

Published On :

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க விடமாட்டோம்; ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைத்துள்ள படத்திற்கு அதிமுக சார்பில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், பா. வளர்மதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆதிராஜாராம் மற்றும் பொன்னையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,

பெண்களுக்குச் சம உரிமை மற்றும் சமூகநீதி குறித்து பெரியார் ஆற்றிய பங்கு முக்கியமானது. பெண்களுக்கான உரிமையை மீட்டுக் கொடுப்பதற்கும், சமூகநீதியை நிலைநாட்டுவதற்கும் பெரியார் முக்கிய பங்காற்றினார்.

பெரியார் வழியில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களிலும் சமூகநீதி மற்றும் பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் பெரியார் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதாகவும், அதேபோல் பெண்களுக்கான உள்ளாட்சி இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் ஜெயலலிதா.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் குறித்து பேசியவர் அவர்,

தமிழக மக்களும், சென்னை மக்களும், குறிப்பாக மீனவ மக்களும் புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே, புதிய தலைமைச் செயலகம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும், அரசு அதனை திரும்பப் பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில், சுமார் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தேவையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

புதிய தலைமைச் செயலகத்திற்காக ரூ.1,200 கோடி செலவு செய்யும் நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை இருப்பதாகவும் விமர்சித்தார்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்குப் பதிலாக, சில கோடி ரூபாய் செலவில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றலாம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது குறித்தும் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தற்போது பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் பயன்பட்டு வரும் நிலையில், அதனை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றுவது ஏற்புடையதல்ல என்றார்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட விடமாட்டோம். அங்கு ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க முடியாது. புதிய தலைமைச் செயலகத் திட்டம் தொடர்பாக அதிமுக சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், ரூ.1,200 கோடி செலவில் புதிய வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு?

இப்போதுதான் தேர்தல் நாமினேஷன் முடிந்திருக்கிறது. இன்னும் நேரம் இருக்கிறது. Let's wait and watch என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறுகையில்:

பணம் பலத்தால் விஜய் மிகவும் ஆட்டம் போடுகிறார், அவர் வெறும் காகிதம் என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள்.. இனிமேல் அவர் ஆட்டம் மக்களிடம் எடுபடாது அவர் ஒரு செல்லாக்காசு என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.