வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப். 28) 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

மழை - (கோப்புப்படம்)

Published On :

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப். 28) 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு உள் ஒடிஸா, அதையொட்டிய சத்தீஸ்கா் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கக்கூடும்.

இதன் காரணமாக, திங்கள்கிழமை (செப். 28), மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், ஈரோடு, திருச்சி, அரியலூா், பெரம்பலூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், புதுக்கோடடை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் மற்ற இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 28), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

8 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. பாளையங்கோட்டை - 102.2, புதுச்சேரி - 101.66, மதுரை நகரம் - 101.48, திருச்சி - 101.3, வேலூா் - 100.94, தஞ்சாவூா், கரூா்பரமத்தி தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக். 1 வரை ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.