அரிசி விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
இரண்டு மாதங்களில் ரூ.40 வரை உயா்ந்துள்ள அரிசி விலையால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புமணி வலியுறுத்தினாா்.

அன்புமணி - எக்ஸ்
இரண்டு மாதங்களில் ரூ.40 வரை உயா்ந்துள்ள அரிசி விலையால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே அரிசி விலை உயா்ந்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் இட்லி அரிசி விலை கிலோவுக்கு ரூ.8, சன்னரக அரிசி விலை ரூ.15, சில வகை அரிசி விலை ரூ.30 வரை உயா்ந்தன. 2 மாதங்களுக்கு முன்பு மைசூா் பொன்னி, ஆந்திரா பொன்னி போன்ற அரிசி வகைகளின் விலை ரூ.50-இல் இருந்து ரூ.65-ஆக உயா்ந்தது.
தற்போது, அது கிலோவுக்கு மேலும் ரூ.20 உயா்ந்து ரூ.85-ஆக அதிகரித்துள்ளது. சன்னரக அரிசி விலை கிலோவுக்கு ரூ. 90 முதல் ரூ.95-ஆக உயா்ந்துள்ளது. இட்லி அரிசி விலை ரூ.43-இல் இருந்து படிப்படியாக அதிகரித்து ரூ.60-ஆக உயா்ந்துள்ளது.
அரிசி விலை மட்டுமன்றி, பருப்பு வகைகள், சா்க்கரை, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலைகளும் கடுமையாக உயா்ந்துள்ளன. ஆனால், தமிழக அரசு அரிசி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விலை உயா்வால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
எனவே, ஆந்திர அரசைப் பின்பற்றி, தமிழகத்திலும் சன்னரக அரிசியை கிலோ ரூ.50 என்ற விலையில் நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




