மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குமேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்! பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வு

மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து...

edappadi palanisamy

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி - படம் - அதிமுக

Published On :

மாற்றுக் கட்சியில் இருந்து ஓடியவர்கள் தவெகவில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப். 27) விமர்சித்தார்.

தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''இந்த தேர்தல் எதற்கு வந்தது என்று உங்களுக்கு நன்கு தெரியும். 5 மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், குதிரை பேரத்தில் மாற்றுக் கட்சியில் இணைந்ததால் இடைத்தேர்தல் நடக்கிறது. அவருக்கு தகுந்த பாடம் கொடுக்க வேண்டும்.

அதிமுக படிப்படியாக தவெகவுக்கு வந்துவிடும் என்று தவெகவினர் கூறுகின்றனர். அது கனவில் கூட நடக்காது. அதிமுகவில் நான் உறுப்பினராக இருந்தபோது, விஜய் பிறக்கக்கூட இல்லை என்று நினைக்கிறேன்.

இரு நாள்களுக்கு முன்பு மதுராந்தக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார்கள். அவரும் அதிமுகவில் இருந்து ஓடியவர்தான். அவரை நல்லவர், வல்லவர் என்று பாராட்டிப் பேசுகிறார் முதல்வர் விஜய்.

ஒரு கட்சியில் இருந்து வெளியேறி உடனே மாற்றுக்கட்சியின் இணைபவர் வல்லவரா?

ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளரை ராஜிநாமா செய்ய வைத்துவிட்டு, தனது கட்சியில் சேர்த்துக்கொண்டு, தனது கட்சியின் பெயரில் மீண்டும் வேட்பாளராக நிறுத்துவதை எப்படி தூய கட்சி என்று கூற முடியும். அது தீய கட்சி.

வெளிப்படையான கட்சி என்று தவெகவை எவ்வாறு கூற முடியும். உண்மையாகவே தனது கட்சி வேட்பாளரை அறிவித்து போட்டியிட வைத்தால் அதை பாராட்டலாம். மாற்று கட்சி உறுப்பினரை தனது கட்சிக்கு இழுத்து வேட்பாளராக நிறுத்துபவர்தான் தவெக தலைவர்'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வரும் அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அக். 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.

Summary

Tharapuram byelection admk campaign Are those who defected to rival parties truly capable EPS criticizes TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.