பிரசவமாகி வீடு திரும்பும் போதே மோதிரம்! தங்க மோதிரம் திட்டத்தின் முக்கிய தகவல்கள்!
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் முக்கிய தகவல்கள் பற்றி...
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடக்கிவைத்தார் முதல்வர் விஜய் - TNDIPR
அரசு மருத்துவமனையில் பிரசவமாகி வீடு திரும்பும் போதே ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று தொடக்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், திட்டம் தொடர்பாக விரிவான விளக்கவுரை ஆற்றினார்.
அப்போது அவர் தெரிவித்த முக்கிய தகவல்கள்:
1. தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார மையங்கள் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை, மாநிலத்தில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும்
2. ஒரு கிராம் எடையுள்ள 22 கேரட் தரம் மற்றும் பிஐஎஸ் முத்திரை பொறித்த தங்க மோதிரம் வழங்கப்படும். இந்த தங்கத்தின் தரத்துக்கு தமிழக அரசு உத்தரவாதம்
3. 2025 ஜூன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்கப்படும். இதுவரை பிறந்த குழந்தைகளுக்கு மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 107 மையங்கள் மூலம் மோதிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
4. இன்று முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு தாயும் சேயும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் போதே வழங்கப்படும்
5. ஒவ்வொரு மோதரத்துக்கும் தனித்துவமான எண், தாயின் ஆர்சிஎச் அடையாள எண் பதிவு என வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படும்
6. முதல்கட்டமாக 1.28 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4.41 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
Summary
Thaimaman Gold Ring Scheme- Key details
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




