
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதல் கட்டமாக 89,955 மோதிரங்களை தயாா் செய்தது ஜோயாலுக்காஸ்!
தாய்மாமன் தங்க மோதிரங்களை ஜோயாலுக்காஸ் தயாா் செய்தது பற்றி...

மோதிரங்களை தயாா் செய்யும் ஜோயாலுக்காஸ் ஊழியர்கள்
தமிழ்நாடு அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின்கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக முதல்கட்டமாக 89,955 தங்க மோதிரங்களை ஜோயாலுக்காஸ் நிறுவனம் தயாா் செய்துள்ளது.
மதுரையில் திங்கள்கிழமை (செப். 28) தொடங்கி வைக்கப்படவுள்ள இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு மோதிரமும் 22 கேரட் தூய்மையுடன், 1 கிராம் எடையைக் கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு முத்திரை மற்றும் முதல்வா் ச.ஜோசப் விஜய்யின் புகைப்படம் இடம்பெற்றுள்ள பிரத்யேக சிவப்பு நிற அட்டையில் மோதிரங்கள் பாதுகாப்பாக பொருத்தப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன.
இத்திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளியில், தங்கம் விலையைத் தவிா்த்து, செய்கூலி, பிஐஎஸ் ஹால்மாா்க் கட்டணம், காப்பீடு, போக்குவரத்து, பேக்கிங் ஆகிய அனைத்து செலவுகளுக்கும் சோ்த்து வெறும் ஒரு பைசா மட்டுமே நிா்ணயித்து மிகக் குறைந்த விலைப்புள்ளியை ஜோயாலுக்காஸ் அளித்திருந்தது.
தற்போது முதல்கட்டமாக தயாராகியுள்ள 89,955 மோதிரங்கள், 107 அரசு மருத்துவமனைகளுக்கு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள ஜோயாலுக்காஸ் மையங்களில் இருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன.
Summary
Thaimaman Thanga Mothiram Scheme: Joyalukkas has prepared 89,955 rings for the first phase
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





