
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: தூத்துக்குடியில் செப்.28இல் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை (செப்.28) தொடங்குகிறது.

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை (செப்.28) தொடங்குகிறது.
இத்திட்டத்தின்கீழ், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்செந்தூா், கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் செப்.28 முதல் அக்.22-ஆம் தேதி வரை பல்வேறு நாள்களில் மோதிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயனாளிகளின் வசதிக்காக அந்தந்த பகுதிகளில் இருந்து வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி, பிற்பகல் 1 மணி என இரு வேளைகளில், ஒரு மையத்தில் தினமும் தலா 25 பேருக்கு மோதிரம் வழங்கப்படும்.
இதற்கான அழைப்பிதழ்கள் அந்தந்த பகுதி கிராம சுகாதார செவிலியா்கள் மூலம் வழங்கப்பட உள்ளன. அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்தில் பயனாளிகள் மோதிரத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இதுதொடா்பான சந்தேகங்களுக்கு 9486454714 என்ற கைப்பேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



