
பிரதமர் வேட்பாளர் விஜய்; தொண்டர்கள் ஆர்வமிகுதியால் சொல்கிறார்கள்: திருமாவளவன்
முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி என திருமாவளவன் பேசியது குறித்து...

முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் கோரிக்கை - கோப்புப் படம்
முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி என விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் செவ்வாய்க்கிழமை (செப். 29) தெரிவித்தார்.
முதல்வர் விஜய்தான் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், தவெக அமைச்சர்கள் சிலரும் இதுமாதிரியான கருத்துகளைத் தெரிவித்து வருகிணரனர்.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளர் என்று யாரும் அதிகாரப்பூர்வமாக பிரசாரம் செய்யவில்லை. அவருடைய தொண்டர்கள், வழித்தோன்றல்கள் ஆர்வத்தின் மிகுதியால் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதை அரசியல் நிலைப்பாடாக பார்க்க முடியாது. எனவே, தவெகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக இதைப் பார்க்கத் தேவையில்லை.
ஒவ்வொரு கட்சியின் தொண்டர்களும் அந்தக் கட்சியின் தலைவர் முதல்வர் ஆக வேண்டும் என ஆசைப்படுவதும் பிரதமர் ஆக வேண்டும் என ஆசைப்படுவதும் இயல்பான ஒன்று. அவ்வாறு தொண்டர்கள் சொல்வதை ஊதிப் பெரிதாக்குகிறார்கள், அவ்வளவுதான்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில ஆண்டுகள் உள்ளன. அந்தத் தேர்தலின் போதுதான் தேசிய அளவில் பிரதமர் யார்? எந்த வேட்பாளரை ஆதரிப்பது? என்பது குறித்த நிலைப்பாடுகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும். ஆகவே, இப்போதைக்கு அதைப் பற்றி பேசுவது காலப்பொருத்தப்பாடு இல்லாத ஒன்று என திருமாவளவன் தெரிவித்தார்.
Summary
VCK leader and MP Thol. Thirumavalavan stated on Tuesday (Sept. 29) that describing actor Vijay as a Prime Ministerial candidate reflects the over-enthusiasm of party cadres.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







