
தவெக ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது! நடிகர் ஜெய்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ஜெய் பேசியது பற்றி...

கோவை விமான நிலையத்தில் நடிகர் ஜெய் - video crop
தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெறுவது நிச்சயம், தவெக ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளதாக நடிகர் ஜெய் குறிப்பிட்டார்.
தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக கோவை வந்த நடிகர் ஜெய், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது, தாராபுரத்தில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள வந்துள்ளேன்.
தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறும் என்ற ஆழமான நம்பிக்கை உள்ளது.
கடந்த 100 நாள்களில் தவெக ஆட்சி மக்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. மக்கள் நிறைய மாற்றங்களை விரும்புகின்றனர். தவெக ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







