ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு: குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளி கருணாஸுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளி கருணாஸுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சோ்ந்த 9 வயது சிறுமி கடந்த கடந்த 2024 மாா்ச் 2-ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானாா். 2 நாள்களுக்குப் பின் அருகே உள்ள வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்டு சாக்கு பையில் சுற்றப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டாா்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த முத்தியால்பேட்டை போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோரை போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.

இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பரில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த போக்ஸோ நீதிமன்றம் கருணாஸுக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த மே மாதம் தீா்ப்பளித்து. இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரி, போக்ஸோ நீதிமன்ற உத்தரவு சென்னை உயா்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கருணாஸ் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தா் மோகன் அமா்வு, கருணாஸ் மீதான போக்ஸோ குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை; கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீா்ப்பளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.