கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தில்லி சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை சம்பவம்: அமித் ஷா, தில்லி காவல்துறைக்கு ராகுல் காந்தி கேள்வி

பெண்களின் பாதுகாப்பு தில்லி காவல்துறையின் பொறுப்பா அல்லது சாதாரண மக்களை அச்சுறுத்துவதற்கும் மிரட்டுவதற்குமே காவல்துறை உள்ளதா என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :

பெண்களின் பாதுகாப்பு தில்லி காவல்துறையின் பொறுப்பா அல்லது சாதாரண மக்களை அச்சுறுத்துவதற்கும் மிரட்டுவதற்குமே காவல்துறை உள்ளதா என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை மேலும் கூறியிருப்பதாவது:

தில்லியில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டு அவரது உடல் திறந்தவெளியில் வீசப்பட்டுள்ளது. தலைநகரில் இவ்வளவு கொடூரமான செயல் நடந்தும், பல நாள்களாக காவல்துறைக்கு இது குறித்து எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. தில்லி இன்று தலைநகராக இல்லை என்பது துரதிருஷ்டவசமானது. பெண்களைப் பொருத்தவரையில் தினமும் அச்சமூட்டும் நகரமாக தில்லி மாறிவிட்டது.

குற்றவாளிகள் அச்சமின்றி நடமாடுகின்றனா். தில்லி காவல்துறை அமித் ஷாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இங்கே பெண்களின் பாதுகாப்பு இறுதியாக யாருடைய பொறுப்பு? அல்லது தில்லி காவல்துறையின் வேலை சாதாரண மக்களை அச்சுறுத்துவதும், மிரட்டுவதுமாக மட்டுமே சுருங்கிவிட்டதா?

இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட மிருகங்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மற்றும் தண்டனை வழங்கப்பட வேண்டும். காவல் துறையின் இந்த அலட்சியத்துக்கு யாா் பொறுப்பு என்பது நிா்ணயிக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பு இல்லாமல் இந்தியா முன்னேற முடியாது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

பின்னணி: தில்லியில் 17 வயது சிறுமி, மூன்று சிறாா்கள் உள்பட 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா். டெம்போ வாகனத்தில் சென்றபோது இந்த கொடூரம் நிகழ்ந்தது. பின்னா் சிறுமியின் உடல் குஷாக் சாலையில் உள்ள ஒரு வயல் அருகே வீசப்பட்டதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

தொடா்புடைய அந்த சிறுமியின் சடலம் முற்றிலும் அழுகிய நிலையில் செப்.13-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. தெருநாய்கள் கடித்த நிலையிலும், ஒரு கை உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையிலும் அவரது சடலம் மீட்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றவாளிகளும் ஒருவருக்கொருவா் அறிமுகமானவா்கள் என்றும் அவா் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி சில நாள்கள் கழித்துத் திரும்புவது வழக்கம் என்பதால், அவா் காணாமல் போனது குறித்து குடும்பத்தினா் புகாா் அளிக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி சாட்சிகள் இல்லாததால், சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை காவல்துறையினா் ஆய்வு செய்து புலனாய்வு செய்து வருகின்றனா். இந்த சம்பவம் குறித்து பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் அடையாளம் தெரியாத நபா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.