கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!

பிரசார மேடையில் தவெக வேட்பாளர் சத்தியபாமா கண்கலங்கி பேசியது தொடர்பாக...

cm vijay

பிரசார மேடையில் கண்கலங்கிய தவெக வேட்பாளர் சத்தியபாமா. - படம்: விடியோ கிளிப்

Published On :

பிரசார மேடையில் தவெக வேட்பாளர் சத்தியபாமா கண்கலங்கி பேசும்போது, அவருக்கு முதல்வர் விஜய் தட்டிக்கொடுத்து ஆறுதல் தெரிவித்தார்.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளா் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வா் ச. ஜோசப் விஜய் பிரசாரம் இன்று(செப். 30) மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ், வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, தவெக தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் பேசியதாவது:

முதல்வர் விஜய் குறித்து ஒரு வார்த்தையில் தெரிவிக்க முடியாது. நான் பார்ப்பது கனவா, நனவா என்று தெரியவில்லை. நாங்கள் செல்லும் கூட்டங்களில் எல்லால், மக்கள் இவ்வளது நேரம் காத்திருந்ததைப் பார்த்ததில்லை.

காசு கொடுத்து அழைத்து வருவார்கள், இன்னேரம் அனைவரும் கலைந்து சென்று இருப்பார்கள். இதெல்லாம் எனக்கு பிரம்மிப்பாக இருக்கிறது. நம் தலைவர் புரட்சித் தலைவரின் மறுபிறவியாக இருக்குமா? நமக்கு திரும்பவும் புரட்சித் தலைவர் கிடைத்துவிட்டார் என்றுதான் நினைக்க வேண்டும். அப்படிப்பட்ட நல்ல தலைவரிடம் வந்து சேர்ந்ததற்கு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.

திமுகவுடன் அதிமுக கூட்டணி வைக்க முயன்றதை பொறுக்காமல் அங்கிருந்து வெளியேறினேன். சமூக வலைதளங்களில் என்மீதான விமர்சனம் மிகவும் வருத்தமடையச் செய்கிறது. அதிமுக இயக்கத்தை பிடிக்காமல் வெளியேறவில்லை, பழனிசாமியின் துரோகத்தைப் பிடிக்காமல் வெளியே வந்தோம். பொதுச் செயலர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு பழனிசாமி உதாரணம்.

என் மீது தவறு இருந்தால் உங்களிடம் துணிச்சலாக பேச முடியுமா? என் மீது சுமத்தப்படும் பழிகள், ஆபாச பேச்சுகள் என்னை காயப்படுத்துகிறது. நான் தவறு செய்யவில்லை, அவ்வாறு செய்திருந்தால் நான் உங்கள் முன்பு வந்து நிற்க மாட்டேன்” என்றார்.

அப்போது, தவெக வேட்பாளர் சத்யபாமா பேசும் போது உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். சத்யபாமாவை தோளில் தட்டிக் கொடுத்து முதல்வர் விஜய் ஆறுதல் சொன்னார்.

Summary

When TVK candidate Sathyabhama became emotional while speaking on the campaign stage, Chief Minister Vijay patted her reassuringly to comfort her.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER