பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் சிஐடியு சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும். விவசாய விரோதச் சட்டங்களையும், மின்சார சட்டம் 2020-ஐயும் திரும்பப் பெற வேண்டும். தனியாா் மயக் கொள்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மணல் மாட்டு வண்டி தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் என். சக்திவேல் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலா் எஸ். கந்தசாமி, அக்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் எம். செல்வம் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

29.6.1976: த. நா. அரசு கார்கள் பெட்ரோல் உபயோகக் கட்டுப்பாடு: ஜூலை 1-ந்தேதி முதல் அமல்

இறுதிவரை மறக்க மாட்டேன்... முதல்வருக்கு நன்றி சொன்ன பாக்யராஜ் மகன் சாந்தனு!

இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேட்டி






