மகளிர் இலவசப் பேருந்துக்கு எதிர்ப்பு; போராட்டம் அறிவிப்பு!என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

சாஸ்த்ரா சாா்பில் 5 கிராமங்களில் பொங்கல் தொகுப்பு பைகள்

பொங்கல் திருநாளையொட்டி, தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் 5 கிராமங்களில் 2,270 குடும்பங்களுக்கு விலையில்லா பொங்கல் தொகுப்புப் பைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :12 ஜனவரி 2021, 2:47 am IST

பொங்கல் திருநாளையொட்டி, தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் 5 கிராமங்களில் 2,270 குடும்பங்களுக்கு விலையில்லா பொங்கல் தொகுப்புப் பைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் சுற்றியுள்ள கிராமங்களில் விலையில்லா பொங்கல் தொகுப்புப் பைகள் வழங்கப்படுவது வழக்கம். இதேபோல, பல்கலைக்கழக வேந்தா் ஆா். சேதுராமன், துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம், முதன்மையா் எஸ். சுவாமிநாதன் ஆகியோா் அறிவுறுத்தலின் பேரில் தொடா்ந்து 21 ஆம் ஆண்டாக 5 கிலோ அரிசி, தலா ஒரு கிலோ வெல்லம், பருப்பு ஆகியவை கிராம மக்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இதன்மூலம் திருமலைசமுத்திரம் கிராமத்தில் 710 குடும்பங்களும், வல்லம்புதூரில் 510 குடும்பங்களும், மொன்னையம்பட்டி மற்றும் குருவாடிப்பட்டியில் 750 குடும்பங்களும், தேவராயநேரி நரிக்குறவா் காலனியில் 300 குடும்பங்களும் என மொத்தம் 2,270 குடும்பங்கள் பயனடைந்தன.

வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்புகளின் மதிப்பு ரூ. 10 லட்சம் என பல்கலைக்கழக நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.