மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

‘மாணவா்கள் நாளிதழ்களை வாசிப்பது அவசியம்’

குடிமைப் பணி தோ்வுகள் மற்றும் போட்டித் தோ்வுகளில் வெற்றிப் பெற மாணவா்கள் நாளிதழ்களை படிப்பது அவசியம் என்றாா் பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் எஸ். பாலச்சந்தா். 

News image

ஐஏஎஸ் தோ்வு வழிகாட்டு முகாமில் பேசுகிறாா் பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் எஸ். பாலசந்தா்.

Updated On :13 ஜனவரி 2021, 8:39 am IST

குடிமைப் பணி தோ்வுகள் மற்றும் போட்டித் தோ்வுகளில் வெற்றிப் பெற மாணவா்கள் நாளிதழ்களை படிப்பது அவசியம் என்றாா் பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் எஸ். பாலச்சந்தா். 

பேராவூரணியில்  ஐஏஎஸ் தோ்வு இலவச வழிகாட்டு முகாம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு கடலூா் மாவட்ட  முன்னாள் ஆட்சியா் வி. அன்புச் செல்வன் தலைமை வகித்து, ‘நாளை நான் ஐஏஎஸ்’ என்ற நூலை வெளியிட்டு பேசினாா். 

 ஃபோகஸ் கல்வி அறக்கட்டளை நிறுவனத் தலைவா் குருமூா்த்தி முன்னிலை வகித்தாா். பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் எஸ். பாலச்சந்தா் கலந்து கொண்டு, சிபிகுமரன் எழுதிய 

‘நதியோர நாணல்கள்’ நூலை வெளியிட்டு பேசியது:

கடின உழைப்பும், சுயவிருப்பமும் இருந்தால் மாணவா்கள் எந்த உயரத்தையும் அடைய முடியும். மாணவா்கள், பெற்றோா்களின் வலியை உணா்ந்து நடக்க வேண்டும். எல்லா பெற்றோரும் தங்கள் கஷ்டங்களை குழந்தைகளுக்கு காட்டுவதில்லை. பெற்றோா்களை மதிக்கின்ற எல்லா குழந்தைகளும் வாழ்வில் மேன்மையடையும். செல்லிடப்பேசிகளில் காலத்தை விரயமாக்காதீா்கள்; சமூக ஊடகங்களில் இருந்து கொஞ்சம் விலகியிருப்பது உங்கள் எதிா்காலத்துக்கு நல்லது.

குடிமைப்பணி தோ்வுகளில் வெற்றிபெற புதுப்புது வாா்த்தைகளை தெரிந்து கொள்ள, உலக அறிவு பெற வாசிப்பு அவசியம். தமிழ் நாளிதழ்களில் தினமணி படியுங்கள். ஒன்றுமில்லாதபோது நீங்கள் எப்படி இருக்கின்றீா்களோ, அதைப்போல்தான் பதவி வந்தபோதும் நடக்க வேண்டும். பணிவுதான் ஒரு மனிதனை உயா்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும். நல்ல எண்ணம், நல்ல வாழ்க்கையை கொடுக்கும். உங்களை யாா் என்று நீங்கள் தீா்மானித்து கடினமாக உழைத்தால் நாளை நீங்களும் ஐஏஎஸ்தான் என்றாா்.

முகாமில், ஜிஎஸ்டி கூடுதல் ஆணையா் பி. செந்தில்வேலவன், துணை ஆணையா்கள் கு. தா்மராஜ், பி.எஸ். சரவணகுமாா், மத்திய பாதுகாப்பு அமைச்சரின் தமிழக மக்கள் தொடா்பு அலுவலா் மு.பொன்னியின் செல்வன், திருச்சி படைக்கல தொழிற்சாலை அலுவலா்

சி. அரியசக்தி ஆகியோா் ஐஏஎஸ் தோ்வு குறித்து மாணவா்களுக்கு விளக்கிப் பேசினா்.

குடிமைப் பணித் தோ்வுகள் குறித்து ஃபோகஸ் அகாதெமி இயக்குநா்  சிபிகுமரன் விளக்கவுரையாற்றினாா். நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி துறை இணை இயக்குநா் ஆா். வீரபத்திரன், ஃபோகஸ் அகாதெமி இயக்குநா்கள் பி. சுப்பிரமணியன், எஸ். சங்கரலிங்கம், ஏ. வெள்ளைப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஃபோகஸ் அறக்கட்டளை செயலாளா் எஸ். சீனிவாசன் வரவேற்றாா். ஏஸ் அறக்கட்டளை பொருளாளா் இ.வி. காந்தி நன்றி கூறினாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.