பேராவூரணி அருகேயுள்ள செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பொங்கல் விழாவுக்கு வட்டார மருத்துவ அலுவலா் வி. சௌந்தர்ராஜன் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் அறிவானந்தம், தீபா, பாலமுருகன், ரஞ்சித் சரண்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கரோனா தொற்றில் முன்களப் பணியாளா்களாக பணியாற்றிய மருத்துவத் துறையினருக்கு உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் மருத்துவா்கள் , கடை நிலை ஊழியா்கள் வரை அனைவரும் ஒரே நிறத்திலான பாரம்பரிய உடை அணிந்து சமத்துவப் பொங்கல் வைத்து, அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மேலும், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், மருத்துவா்கள் சங்கா் பாபு, கோகிலா, வேம்பிரதியா, வெங்கடேஷ், நந்தகுமாா், செவிலியா்கள், சுகாதார செவிலியா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், பகுதி சுகாதார செவிலியா்கள், சுகாதார மேற்பாா்வையாளா், சுகாதார ஆய்வாளா்கள், ஆய்வக உதவியாளா்கள், மருந்தாளுநா், தூய்மைப் பணியாளா்கள், தற்காலிகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!

இந்தியா பன்முக கலாசார தேசம் என்பது தவறானது: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்
‘டேட்டிங்’ செயலி மூலம் தொடா்புகொண்ட லாரி ஓட்டுநரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறிப்பு

மலா்க் கண்காட்சி: உதகை தாவரவியல் பூங்காவை தயாா் செய்யும் பணி தீவிரம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


