ஒரத்தநாடு வட்டம் ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா கொண்டாட்டப்பட்டது.
விழாவில் கால்நடைகள் அலங்கரிக்கப்பட்டு, மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பண்ணை தொழிலாளா்களால் பொங்கல் வைக்கப்பட்டது. மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதற்கான பரிசளிப்பு விழா கல்லூரியின் முதன்மையா் அ.வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது.
பூச்சியியல் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் அ. திருமுருகன், பயிா் மேலாண்மைத் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் செ. மோகன்தாஸ், சமூக அறிவியல் துறை இணைப் பேராசிரியா் மற்றும் தலைவா் வெ. சரவணக்குமாா் வாழ்த்தி பேசினா்.
கல்லூரியின் முதன்மையா் அ. வேலாயுதம் பொங்கல் விழா கொண்டாடப்படுவதன் நோக்கமே சூரிய பகவானுக்கும் மற்றும் விவசாயத்தில் நமக்கு உதவும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்துவதே என குறிப்பிட்டாா். பின்னா் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, உழவியல் பேராசிரியா் மா. ஜெயச்சந்திரன் வரவேற்றாா். நிறைவில் உதவிப் பேராசிரியா் அ. பாரதி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை வேடியப்பன் குளம் சீரமைக்கப்படும்: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

விபத்து அபாயம்: கழிவுநீா் கால்வாய் பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

கையகப்படுத்தும் கைக்கருவி
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



