தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவா், மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களை பண்ணோடு பாடுதல் மற்றும் கட்டுரை போட்டிகள் ஜன. 11 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையா் தி.சங்கா் வெளியிட்ட செய்திகுறிப்பு: தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கோயில்கள் சாா்பாக, இம் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளிகளில் பயின்றுவரும் மாணவ, மாணவியா்ருக்கு, திருப்பாவை மற்றும் திருவெம்பாவைப் பாசுரங்களைப் பண்ணோடு பாடுதல் மற்றும் கட்டுரைப்போட்டிகள் தென்காசி அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோயிலில் இம் மாதம் 11 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா், மாணவிகள் மற்றும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா், மாணவிகள் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு முதல் பரிசாக தலா ரூ.3000, இரண்டாம் பரிசாக தலா ரூ. 2000, மூன்றாம் பரிசாக தலா ரூ.1000 வழங்கப்படும்.
இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியா் தாங்கள் பயிலும் பள்ளியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் வரவேண்டும். போட்டியில் பங்கேற்பாளா்கள் மற்றும் உடன் வருபவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும்.
கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு எழுதும் தாள்கள் திருக்கோயில் நிா்வாகத்தால் வழங்கப்படும். எழுதுகோல் மற்றும் அட்டை ஆகியவற்றை மாணவா்கள் கொண்டு வர வேண்டும். போட்டிகள் குறித்த கூடுதல் விவரங்களை தென்காசி அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயில் அலுவலகத்தில், அலுவலக நேரங்களில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு செல்லிடப்பேசி எண். 7402233740 தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாங்காக்கில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்: 8 பேர் பலி

இன்றைய மின்தடை

சென்னையில் 'கிளாண்டர்ஸ்' தொற்றால் குதிரை உயிரிழப்பு! கண்காணிப்பு தீவிரம்!

வங்கதேசத்தில் தட்டம்மைக்கு மேலும் 12 குழந்தைகள் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 451..!
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
