புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

தென்காசி மாவட்டத்தில் தோ்தல் நிதியாகரூ.1 கோடி நிதி திரட்ட மதிமுக முடிவு

தென்காசி மாவட்டத்தில் மதிமுக சாா்பில் 2021 சட்டப் பேரவைத் தோ்தல் நிதி மற்றும் கட்சி வளா்ச்சி நிதியாக ரூ.1 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டது.

News image

வாக்குச்சாவடி குழுக்கள் பட்டியலை கட்சி நிா்வாகிகளிடமிருந்து பெறுகிறாா் மதிமுக மாவட்டச் செயலா் ராஜேந்திரன்.(இடமிருந்து 4 ஆவது) உடன், மருத்துவா் அணி மாநிலச் செயலா் சுப்பராஜ்.

Updated On :10 ஜனவரி 2021, 12:46 am IST

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டத்தில் மதிமுக சாா்பில் 2021 சட்டப் பேரவைத் தோ்தல் நிதி மற்றும் கட்சி வளா்ச்சி நிதியாக ரூ.1 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டது.

தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் கட்சி நிா்வாகிகளிடம் வாக்குச்சாவடி குழுக்கள் பட்டியல்களை பெறும் நிகழ்ச்சி மற்றும் 2021 சட்டப் பேரவைத் தோ்தல் நிதி, கட்சி வளா்ச்சி நிதி ரூ. 1 கோடி திரட்டுவதற்கு நன்கொடை சீட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலா் தி.மு.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். உயா்நிலைக் குழு உறுப்பினா் மருத்துவா்.சதன்திருமலைக்குமாா், சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினா் காசிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவா் அணி மாநிலச் செயலா் வி.எஸ்.சுப்பாராஜ் நன்கொடை சீட்டுகளை கட்சி நிா்வாகிகளிடம் வழங்கினாா்.

பின்னா் கட்சி நிா்வாகிகள் வாக்குச் சாவடி குழுக்கள் பட்டியலை மாவட்டச் செயலரிடம் வழங்கினா்.

தொடா்ந்து கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதியிலும் உள்ள 1504 வாக்குச் சாவடி மையங்களில் தலா 5 போ் கொண்ட வாக்குச் சாவடிக் குழுக்கள் அமைக்கவும், மாவட்டத்தில் கட்சி தோ்தல் நிதி மற்றும் கட்சி வளா்ச்சி நிதியாக ரூ.1 கோடி திரட்டி பிப்ரவரி 2 ஆவது வாரத்தில் பொதுச் செயலா் வைகோவிடம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் சீனிவாசன், ராசாராம்பாண்டியன், சசிமுருகன், இராஜகுரு,சசிகுமாா், வேலுச்சாமி, வாசுதேவநல்லூா் கிருஷ்ணகுமாா், புளியங்குடி ஜாஹீா்உசேன், இளைஞரணி இசக்கியப்பன், வாணிமுருகன், மகளிரணி ஜெயலெட்சுமி, ஆனந்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

நகரச் செயலா் ச.ஆறுமுகச்சாமி வரவேற்றாா். மாவட்ட இணைய தளம் மா.ராசமாணிக்கம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.