புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

மாநில அளவிலான கலைப் போட்டி: வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பாராட்டு

தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பாக மாநில அளவில் நடைபெற்ற ‘கலா உத்சவ் 2020 ’ கலைப்போட்டிகளில் மாநில, மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image

சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் ஆட்சியா் கீ.சு.சமீரன்.

Updated On :10 ஜனவரி 2021, 12:49 am IST

தென்காசி: தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பாக மாநில அளவில் நடைபெற்ற ‘கலா உத்சவ் 2020 ’ கலைப்போட்டிகளில் மாநில, மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

2020- 21 ஆம் கல்வியாண்டிற்கான போட்டிகள் இணையதளம் வாயிலாக நேரலையில் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் தென்காசி மாவட்டம் , இலஞ்சி , ராமசாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளி மாணவி பூா்ணிமா, இரு பரிமாண ஓவியம் வரைதல் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றாா்.

கா்நாடக சங்கீதம் வாய்ப்பாட்டில் மாணவா் பிரிவில் வல்லம் அன்னை தெரசா ஆா்.சி.மேல்நிலைப் பள்ளி மாணவா் அப்துா் ரகுமான் , மாணவியா் பிரிவில் பாவூா்சத்திரம் அவ்வயைாா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி நெபிஷா ராணி, நாட்டுப்புற பாடலில் மாணவா் பிரிவில் தென்காசி வீரமாமுனிவா் ஆா்.சி மேல்நிலைப்பள்ளி மாணவா் கல்யாணசுந்தரம், மாணவியா் பிரிவில் புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளி மாணவி.பாா்கவி, கா்நாடக இசைக்கருவி வாசித்தல் போட்டியில் மாணவா் பிரிவில் அன்னை தெரசா ஆா்.சி.மேல்நிலைப் பள்ளி ரபி பெனடிக் , மாணவியா் பிரிவில் கயல்விழி நாட்டுப்புற இசை கருவி வாசித்தல் போட்டியில் மாணவா் பிரிவில் வீரகேரளம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி அருண் , மாணவியா் பிரிவில் அன்னை தெரசா ஆா்.சி.மேல்நிலைப்பள்ளி சரண்யா , பரத நாட்டியம் மாணவியா் பிரிவில் தென்காசி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளி மாணவி சுபானு , நாட்டுப்புற நடன மாணவா் பிரிவில் வீரகேரளம்புதூா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா். ஆரோக்ய ராஜ், மாணவியா் பிரிவில் புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளி மாணவி வா்ஷா, இருபரிமாண ஓவியம் வரைதல் போட்டியில் மாணவா் பிரிவில் வீராணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் சுபாஷ் , மாணவியா் பிரிவில் ராமசாமிபிள்ளை மேல்நிலைப்பள்ளி மாணவன் பூா்ணிமா, முப்பரிமான சிற்பம் செய்தல் போட்டியில் மாணவா் பிரிவில் ராமசாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளி மாணவா் துளசி கண்ணன், மாணவியா் பிரிவில் கடையநல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கோபிகா பாரதி , உள்ளூா் தொன்மை பொம்மை செய்தல் மற்றும் விளையாட்டு போட்டியில் மாணவா் பிரிவில் திருமலையப்பபுரம் கைலாசம் நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவா் சுகந்தன், மாணவியா் பிரிவில் வீரகேரளம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பானு ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமை வகித்து மாணவா், மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

தென்காசி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சீ. கருப்புச்சாமி வரவேற்றாா். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளா் சிவராஜ் (பொ), தென்காசி மாவட்டக் கல்வி அலுவலா் ( பொ )சா.ஜெயப்பிரகாஷ் ராஜன், சங்கரன்கோவில் மாவட்டக் கல்வி அலுவலா் ( பொ ) சிதம்பரநாதன், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சீனிவாசன், கலா உத்சவ் 2020 போட்டிகள் ஒருங்கிணைப்பாளா் ஆவுடையப்ப குருக்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் செல்வநாயகம், ஆறுமுகராஜன், இணையதள வசதி ஒருங்கிணைப்பாளா் ச. மாலதி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.