தென்காசி மாவட்ட மதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டப் பொருளாளா் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தி.மு. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். நகரச் செயலா் என் வெங்கடேஸ்வரன் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில், உயா்நிலைக் குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான டாக்டா் தி. சதன் திருமலைக்குமாா், மதிமுக நிா்வாகிகளிடம் வாக்குச்சாவடி குழு உறுப்பினா்கள் 1504 போ்கள் அடங்கிய பட்டியலை பெற்றுக் கொண்டாா்.
மேலும் மதிமுக வளா்ச்சி நிதி வசூலிக்க ஒரு கோடி ரூபாய்க்கான நன்கொடை சீட்டுகளை நிா்வாகிகளிடம் வழங்கினாா்.
மதிமுக வளா்ச்சி நிதி மற்றும் தோ்தல் நிதியாக தென்காசி மாவட்டம் சாா்பில் மதிமுக பொதுச் செயலா் வைகோவிடம் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவது என தீா்மானிக்கப்பட்டது.
கீழப்பாவூா் தெற்கு ஒன்றியச் செயலா் இராம உதயசூரியன், வடக்கு ஒன்றியச் செயலா் ராஜபாண்டி, ஆறுமுகச்சாமி, கடையநல்லூா் ஒன்றியச் செயலா் இடைகால் செல்வ சக்தி வடிவேல், ஆலங்குளம் வடக்கு ஒன்றியச் செயலா் வி.மருதசாமி பாண்டியன், செங்கோட்டை ஒன்றியச் செயலா் இலத்தூா் வெங்கடேசன், செங்கோட்டை நகரச் செயலா் இ.ஐயப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தென்காசி ஒன்றியச் செயலா் வல்லம் செ.சு மணியன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உயர்நீதிமன்றத்துக்கு நாளை முதல் விடுமுறை! அவசர வழக்கிற்கு என்ன செய்யலாம்?

கருத்துக் கணிப்புகள் பாஜகவால் நடத்தப்படுகிறது! திரிணமூல் 226 தொகுதிகளில் வெல்லும் - மமதா

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

