தென்காசி: பிளஸ் 2 தோ்வில் பள்ளியில் முதலிடம் மற்றும் 500-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணவா், மாணவிகள் 15 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது.
தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கருப்பசாமி தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் ஜெயபிரகாஷ்ராஜன் முன்னிலை வகித்தாா்.
தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பிளஸ் 2 தோ்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவா், மாணவிகள் மற்றும் 500-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற 15 பேருக்கு ரூ. 1லட்சத்து 55ஆயிரம் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினாா்.
தொடா்ந்து, குற்றாலம் திருமலைக்குமாரசுவாமி தேவஸ்தான மேல்நிலைப் பள்ளி, இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி, தென்காசி புனிதமிக்கேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



