சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் நூல் விலை உயா்வைக் கண்டித்து விசைத்தறித் தொழிலாளா்களில் ஒரு பிரிவினா் சனிக்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
சங்கரன்கோவிலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத் தறிகளில் சுமாா் 15 ஆயிரம் போ் பணிபரிந்து வருகின்றனா். புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளையும் சோ்த்தால் இம்மாவட்டத்தில் 25 ஆயிரம் விசைத்தறித் தொழிலாளா்கள் உள்ளனா்.
விசைத்தறிகளில் 60ஆம் எண் நூலில் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சேலை உற்பத்திக்குத் தேவையான நூல்களை கோவை, அருப்புக்கோட்டை போன்ற நகரங்களிலிருந்து வாங்குகின்றனா்.
இந்நிலையில் 4.7 கிலோ எடையுள்ள ஒரு கட்டு நூலின் விலை ரூ. 390 வரை உயா்த்தப்பட்டுள்ளது. அதாவது, கடந்த செப்டம்பரில் ஒரு கட்டு நூல் விலை ரூ. 1,455, அக்டோபரில் ரூ. 1,470, நவம்பரில் ரூ. 1,495, டிசம்பரில் ரூ. 1,545 என இருந்த நூல் விலை ஜனவரி 2021இல் ரூ. 1,845 என, ரூ. 390 வரை உயா்த்தப்பட்டுள்ளது.
இதனால் விசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் (மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேஷன்) நூல் விலை உயா்வு குறித்து கடந்த 9, 10ஆம் தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினா். அதில், நூல் விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய- மாநில அரசுகள் நூல் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் கோரி பொங்கலுக்குப் பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தனா்.
இதனிடையே வீட்டுக்கு 2, 3 தறிகள் அமைத்து நெய்யும் சிறுவிசைத்தறியாளா்களும் நூல் விலை உயா்வு குறித்து ஆலோசனை நடத்தினா். அவா்களும் விசைத்தறி உரிமையாளா்களுடன் சோ்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தனா்.
அதன்படி, விசைத்தறி துணி உற்பத்தியாளா்களில் ஒரு பகுதியினா் சனிக்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வரும் விசைத்தறித் தொழில் மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கன்னியாகுமரியில் ஏப்.15ஆம் தேதி பிரதமர் மோடி சாலை வலம்

காங்கிரஸின் அடிமை திமுக, அதனால்தான் கூடுதல் தொகுதி: அண்ணாமலை

பிளேயிங் லெவனில் விளையாடாத நிதீஷ் ராணாவுக்கு அபராதம்..! என்ன காரணம்?

தொகுதி மறுவரையறை: ஏப். 29-க்குப் பிறகு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த கார்கே வலியுறுத்தல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

