சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தென்காசி மாவட்டத்தில் ஏப்.17 முதல் 19 வரை மதுபானக் கடைகள் மூடல்

தென்காசி மாவட்டத்தில் ஏப்.17 முதல் 19 வரை மதுபானக் கடைகள் மூடல்

Updated On :5 ஏப்ரல் 2024, 4:20 pm

தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் ஏப்ரல் 17, 18, 19 மற்றும் ஜூன் 4 ஆகிய நாள்களில் மூடப்பட்டிருக்கும் என ஆட்சியா் ஏகே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஆட்சியா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, ஏப் 17ஆம் தேதி காலை 10 மணிமுதல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன்4ஆம் தேதியும் மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் விற்பனை ஏதும் நடைபெறாது என்றாா் அவா்.