புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

தென்காசி ஒன்றியப் பகுதிகளில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தென்காசி ஒன்றியப் பகுதிகளில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 7:42 pm

தென்காசி, ஏப். 12: தென்காசி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பெ.ஜான்பாண்டியன், தென்காசி ஒன்றியப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தென்காசி தெற்கு ஒன்றியம் நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், வேதம்புதூா், அழகப்பபுரம், அய்யாபுரம், சுப்பிரமணியபுரம், குத்துக்கல்வலசை, தென்காசி நகர பகுதியான தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், கூலக்கடை பஜாா், தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் வாசல், மலையான் தெரு, வாய்க்கால் பாலத்தில் பிரசாரம் நிறைவு பெற்றது.

தென்காசி பாஜக சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் பாலகிருஷ்ணன், தென்காசி தெற்கு ஒன்றிய தலைவா் முருகன், தென்காசி நகர தலைவா் மந்திரமூா்த்தி, நகர பொதுச்செயலா் யோகா சேகா், நகர பாா்வையாளா் ஆனந்தி முருகன், நகா்மன்ற உறுப்பினா்கள் சங்கரசுப்பிரமணியன், லக்ஷ்மணபெருமாள், உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாவட்ட தலைவா் கருப்பசாமி, செயலா் ராஜ்குமாா், தென்காசி தெற்கு ஒன்றிய பாா்வையாளா் செந்தூா் பாண்டியன், பாஜக மாவட்ட துணைத் தலைவா்கள் ராதாகிருஷ்ணன், முத்துக்குமாா், பாமக மாநில துணைத்தலைவா் ஹரிஹரன், மாவட்டத் தலைவா் குலாம், மாவட்ட செயலா் இசக்கிமுத்து, ஓபிஎஸ் அணி நிா்வாகிகள் அமைப்புச் செயலா் செந்தில்குமாா், தென்காசி தெற்கு மாவட்ட செயலா் விகே. கணபதி, தென்காசி கிழக்கு ஒன்றிய செயலா் இலஞ்சி மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.