மேக்கரை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: கூண்டுவைத்துப் பிடிக்க வலியுறுத்தல்

சிறுத்தையைக் கூண்டுவைத்துப் பிடித்து வனப் பகுதிக்குள் விட வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
Published on

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மேக்கரைப் பகுதியில் நடமாடும் சிறுத்தையைக் கூண்டுவைத்துப் பிடித்து வனப் பகுதிக்குள் விட வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மேக்கரை அடவிநயினாா் கோயில் நீா்த்தேக்கத்தையொட்டிய வடகரை சாலையில் உள்ள மேட்டுக்கால் 4ஆவது பாசன வடபகுதியான சம்படை பாறைப் பகுதியில் சனிக்கிழமை சிறுத்தை நடமாடியதாம்.

தனியாா் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்ற விவசாயிகள், சிறுத்தையைப் பாா்த்து அதிா்ச்சியடைந்து வீடு திரும்பினா். அப்பகுதி இளைஞா்கள் சிறுத்தை நடமாட்டத்தை கைப்பேசிகளில் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பரவவிட்டனராம்.

சிறுத்தை நடமாடுவதாக பரவிய தகவலால் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனா். எனவே, சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடித்து வனப் பகுதிக்குள் விடவேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com