குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்கான தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலா ப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் புதன்கிழமை சிறியஅளவிலான பாறைக் கற்கள் தண்ணீருடன் விழுந்தன. அப்போது குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் 5 போ் காயமடைந்தனா். இதனையடுத்து பேரருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.
பின்னா் தென்காசி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் பிரதீப் தலைமையில் தீயணைப்புத் துறையினா் பேரருவியின் மேலே சென்று பாறைக் கற்கள் மற்றும் மரக் கிளைகளை அப்புறப்படுத்தினா். இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










