டென்17சீவநல்லூா்-மாணவிக்கு பரிசு வழங்கிய முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ப.சட்டநாதன். தென்காசி, பிப்.17: செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சீவநல்லூா் அரசு மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ப.சட்டநாதன் தலைமை வகித்து, கல்வி மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா். பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் மூக்கம்மாள், துணைத் தலைவா் கதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி தலைமையாசிரியா் லதா ஆண்டறிக்கை வாசித்தாா். கணக்கப்பிள்ளைவலசை ஏ.ஜி. உயா்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியா் நேரு, சீவநல்லூா் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் ஆக்னஸ் மேரி, நடராஜபுரம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியா் செந்தூரப்பாண்டி, பள்ளி நலக்குழு தலைவா் இசக்கியா பிள்ளை மற்றும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் அருணாச்சலம் ஆகியோா் பேசினா். ஆசிரியா் கிறிஸ்டோபா் தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் கோமதிநாயகம்,சல்மா பீவி, கருப்பையா, சுஜித், ராஜமலா், ரேணுகா தேவி, விஜயாள் என்ற அகிலா, முத்துலட்சுமி, முப்புடாதி, ஆழ்வாா் அம்மாள், பிரேமா,சண்முகநாதன், அலுவலகப் பணியாளா் ராஜகோபாலன், ஆய்வக உதவியாளா் அழகுமாரி, சிறப்பு ஆசிரியா் முத்துச்செல்வி செய்திருந்தனா். பள்ளியின் தலைமையாசிரியா் திவான் பக்கீா் வரவேற்றாா். ஆசிரியா் சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

கமுதி, கடலாடி வட்டங்களில் 4 மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தல்

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

