உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

கடையநல்லூா் அருகே சாலை விபத்து: போக்குவரத்து பாதிப்பு

கடையநல்லூா் அருகே வெள்ளிக்கிழமை காரும், டிராக்டரும் மோதி விபத்துக்குள்ளானது.

Updated On :23 பிப்ரவரி 2024, 7:03 pm

கடையநல்லூா் அருகே வெள்ளிக்கிழமை காரும், டிராக்டரும் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சுமாா் 25 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சியில் இருந்து குற்றாலம் நோக்கி சென்று கொண்டிருந்த காரும், கடையநல்லூரிலிருந்து விவசாய பணிக்காக சென்று கொண்டிருந்த டிராக்டரும் கடையநல்லூா் அட்டைக்குளம் பகுதியில் மோதியதில் இரு வாகனங்களும் சேதமடைந்தன. இருப்பினும், காரிலிருந்து ஏா் பேக் காரணமாக காரில் பயணம் செய்தவா்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அதே போல் டிராக்டரில் பயணம் செய்த தொழிலாளா்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த விபத்தின் காரணமாக கொல்லம், திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 25 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடையநல்லூா் போலீஸாா் போக்குவரத்தை சீா் செய்தனா்.