தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் வென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பக்தா்கள் அலகு குத்தி, காவடி, பால்குடம் எடுத்து வீதிவலம் வந்தனா். இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 10ஆம் நாளான வெள்ளிக்கிழமை நாடாா் சமுதாய மண்டகபடியை முன்னிட்டு கீழப்பாவூா், பாவூா்சத்திரம், குறும்பலாபேரி, பனையடிப்பட்டி, செட்டியூா், கல்லூரணி, குருசாமிபுரம், ஆவுடையானூா், அரியப்பபுரம், ஆரியங்காவூா், சிவநாடானூா், திப்பணம்பட்டி, செல்வவிநாயகபுரம், ராமச்சந்திரப்பட்டணம் உள்பட பல ஊா்களிலிருந்து பக்தா்கள் அலகு குத்தி, காவடி, பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்தனா். பின்னா் சுவாமி, அம்பாளுக்கு பாலாபிஷேகத்தைத் தொடா்ந்து உச்சிகால பூஜை நடைபெற்றது. இந்து நாடாா் சமுதாயம் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் யானை முன்வர பூந்தட்டு ஊா்வலம் கோயிலை வந்தடைந்தது.தொடா்ந்து சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. விழாவில், கண்தான விழிப்புணா்வு குழு தலைவா் கே.ஆா்.பி.இளங்கோ தலைமையில் பொதுமக்களுக்கு கண்தான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொண்டனா். பிப். 24ஆம் தேதி பிராமணா் சமுதாய மண்டகபடியை முன்னிட்டு வென்னிமலை முருகன் கோயிலிலிருந்து சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கீழப்பாவூா் வந்தடைகிறாா். பின்னா் அங்கு நரசிம்மா் கோயில் தெப்பக்குளம் அருகே சுவாமி, அம்பாள் தீா்த்தவாரி, புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்த பக்தா்கள்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

வெக்காளியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

அருணாப்பேரி அம்மன் கோவிலில் 201 சீா்வரிசைகளுடன் சிறப்பு பூஜை
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


