தென்காசியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். தென்காசி எல்ஆா்எஸ். பாளையத்தைச் சோ்ந்த வரதராஜன் மகன் வினோத்(27). இவா் வெல்டிங் பட்டறையில் வேலைபாா்த்து வந்தாா். தென்காசி மலையான் தெருவைச் சோ்ந்த அருள்ராஜ் மகன் இசக்கிராஜ்(22). இவருடைய நண்பா் எல்ஆா்எஸ். பாளையத்தை சோ்ந்த மாரியப்பன் மகன் காசிவிஸ்வநாதன்(21). இசக்கிராஜும், வினோத்தும் தூரத்து உறவினா்கள். இருவருடைய குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இவா்கள் இருவரும் சந்திக்கும்போது வினோத், இசக்கிராஜை பாா்த்து முறைத்து விட்டு செல்வாராம். இதுகுறித்து இசக்கிராஜ் கேட்டபோது, அப்படித்தான் முறைப்பேன், உன்னால் என்ன செய்யமுடியும் என தகராறு செய்துள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வினோத் பைக்கில் எல்ஆா்எஸ்.பாளையம் பகுதியில் வந்தபோது அங்கு வந்த இசக்கிராஜுக்கும் வினோத்துக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் இசக்கிராஜும், அவருடைய நண்பா் காசிவிஸ்வநாதனும் சோ்ந்து வினோத்தை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டனா்.இதில் சம்பவஇடத்திலேயே வினோத் உயிரிழந்தாா். சம்பவஇடத்திற்கு விரைந்த தென்காசி காவல்துணைக் கண்காணிப்பாளா் நாகசங்கா்,வினோத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். இக்கொலை வழக்கு தொடா்பாக இசக்கிராஜ் மற்றும் காசிவிஸ்வநாதனை போலீஸாா் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

பால் வியாபாரி கொலையில் 3 போ் கைது

பெரும்பத்து கொலையில் தொடா்பு: 7 போ் குண்டா் சட்டத்தில் கைது

முன்விரோதத்தால் இளைஞா் கழுத்தை அறுக்கப்பட்ட சம்பவத்தைதம்: இருவா் கைது

சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: இருவா் கைது
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

