தென்காசி மாவட்டம் நாகல்குளத்தில் இயங்கிவரும் நியாயவிலைக் கடையை முழுநேரக் கடையாக மாற்ற வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மத்தியஅரசு நலத்திட்ட பிரிவு மாநிலச் செயலா் மருதுபாண்டியன், மாவட்ட வருவாய்அலுவலரிடம் அளித்த மனு: நாகல்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அமுதம் நியாய விலைக்கடையில் மொத்தம் 694 குடும்ப அட்டைகள் உள்ளன. பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த வேலைக்கு சென்று வருவதால் நியாய விலைக்கடையானது பகுதி நேரமாக செயல்படுவதால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே பொருள்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுகினறனா். இதனால் பகுதி நேரமாக செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையை முழு நேரமாக மாற்றித் தரவேண்டும். மேலும் நாகல்குளம் ஊராட்சியை பெத்தநாடாா்பட்டி 2 இல் இருந்து பிரித்து தனி வருவாய் கிரமமாக உருவாக்கி தரவேண்டும். 20 கிராம விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான இரட்டை கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. தொழில்பிரிவு மாநில செயலா் வி.எஸ்.அருணாசலம் கலந்துகொண்டாா்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தை சிதைத்து அடையாளத்தை மாற்ற நினைக்கும் பாஜக! திரிணமூல்

கடலூா் பாஜக நிா்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக-ஆா்எஸ்எஸ் முயற்சி: தேஜஸ்வி யாதவ்

திண்டிவனத்தில் மசூதி அருகேயுள்ள வாக்குச்சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

