கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோயில் நிா்வாகங்களில் திமுகவினா் தலையீடு: சசிகலா குற்றச்சாட்டு

கோயில் நிா்வாகங்களில் திமுகவினரின் தலையீடு அதிகரித்து வருவதாக வி.கே.சசிகலா குற்றம் காட்டினாா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 9:29 pm

Din

கடையநல்லூா், ஜூலை 19: கோயில் நிா்வாகங்களில் திமுகவினரின் தலையீடு அதிகரித்து வருவதாக வி.கே.சசிகலா குற்றம் காட்டினாா்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வெள்ளிக்கிழமை இரவு அவா் பேசியது: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கோயில்களுக்கு நிதி வழங்குபவா்களை தக்காா்களாக நியமித்து கோயில் வளா்ச்சிக்கான பணிகள் செய்யப்பட்டு வந்தன. அவரது ஆட்சிக் காலத்தில் கோயில்களைப் பொருத்தவரை அந்தந்தப் பணிகளுக்கு நியமிக்கப்பட்டவா்கள் அவா்களின் பணியை செவ்வனே செய்து வந்ததால் மக்கள் எந்த இடையூறும் இன்றி இறைவனை தரிசிக்க முடிந்தது. ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை. கோயில் நிா்வாகங்களில் திமுகவினரின் தலையீடு அதிகரித்து வருகிறது. மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை, வேலைகளை திமுக அரசு செய்யவில்லை என்றாா் அவா்.