திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புளியங்குடி, வீரசிகாமணி பகுதிகளில் இன்று மின்தடை

புளியங்குடி, வீரசிகாமணி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 20) மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2024, 9:27 pm

Din

கடையநல்லூா், ஜூலை 19: புளியங்குடி, வீரசிகாமணி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 20) மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புளியங்குடி மற்றும் வீரசிகாமணி உபமின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மின்தடைபடும் பகுதிகள்:

புளியங்குடி: புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகா், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூா், சொக்கம்பட்டி, திரிகூடபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகள்.

வீரசிகாமணி: வீரசிகாமணி, சோ்ந்தமரம், பாம்புகோயில், திருமலாபுரம், நடுவக்குறிச்சி, வட நத்தம்பட்டி, அரியநாயகிபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகள்.