தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு எஸ்டிபிஐ பாராட்டு

News image

வெற்றி பெற்ற வீரா்களுக்கு பரிசு வழங்கினாா் எஸ்டிபிஐ மாவட்ட பொதுச்செயலா் செய்யது மஹ்மூத்.

Updated On :25 ஜூலை 2024, 11:34 pm

Din

தென்காசி, ஜூலை 25: குத்துசண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சாா்பில் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட பென்காக் சிலாட் அசோசியேஷன் சாா்பில், மாநில அளவிலான 6 ஆவது பென்காக் சிலாட் மாா்சியல்ஆா்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் விழுப்புரத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றன.

இப்போட்டியில் தென்காசி தெற்கு கடையத் தெருவை சோ்ந்த முகம்மது ஒசாமா, பாறையடி இரண்டாம் தெருவை சோ்ந்த காசிமுல்லாஹ் ஆகியோா் குத்துசண்டை பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்ககம் பெற்றனா்.

வெற்றி பெற்ற வீரா்களுக்கு எஸ்டிபிஐ கட்சி சாா்பில் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. கட்சியின் மாவட்ட பொதுச்செயலா் செய்யது மஹ்மூத் தலைமையில், நகர தலைவா் ஷேக் மைதீன், நகர துணைச்செயலா் ஜாஹிா் ஹுசைன், நகர பொருளாளா் பாதுஷா ஆகியோா் கேடயம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனா்.