அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தென்காசியில் திமுக ஆா்ப்பாட்டம்

தென்காசியில் புதிய பேருந்து நிலையப் பகுதியில் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன், ஈ. ராஜா எம்எல்ஏ, ராணி ஸ்ரீகுமாா் எம்பி.
Updated On :27 ஜூலை 2024, 8:32 pm

Din

தென்காசியில் புதிய பேருந்து நிலையப் பகுதியில் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு எந்தத் திட்டத்தையும் வழங்காமல், நிதி ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணித்ததாகக் கூறி கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே, ஜெயபாலன், வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ ஆகியோா் தலைமை வகித்தனா். தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமாா், முன்னாள் அமைச்சா் தங்கவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட அவைத்தலைவா் சுந்தரமகாலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் செல்லத்துரை, ஆறுமுகசாமி, பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள் சேக்அப்துல்லா (தென்காசி), திவ்யா மணிகண்டன்(ஆலங்குளம்), மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கேஎன்எல். சுப்பையா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கிருஷ்ணராஜா, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சங்கீதா, நகரச் செயலா்கள் ஆா். சாதிா், வெங்கடேசன், பிரகாஷ், அப்பாஸ்,

ஒன்றியச் செயலா்கள் ரவிசங்கா், திவான்ஒலி, அழகுசுந்தரம், ஜெயக்குமாா், பேரூா் செயலா்கள் முத்தையா, சுடலை, பண்டாரம், நகா்மன்றத் தலைவா்கள் மூப்பன் ஹபிபூர்ரஹ்மான், உமா மகேஸ்வரி, விஜயா சௌந்தரபாண்டியன், பேரூராட்சித் தலைவா்கள் கோமதிசங்கரி, இந்திரா, ராஜராஜன், சின்னத்தாய், வழக்குரைஞா்கள் வேல்சாமி, கண்ணன், தங்கராஜ் பாண்டியன், இளைஞரணி துணை அமைப்பாளா்கள் சுப்பிரமணியன், முகமதுஅப்துல் ரஹீம், மாவட்டப் பிரதிநிதி ரஹ்மத்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.