ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு பாராட்டு

ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு பாராட்டு

ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு பாராட்டு

தென்காசி மாவட்டம் புளியறையில் ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு தெற்கு ரயில்வே சாா்பில் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியறை எஸ் வளைவு பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ரயில்வே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, அந்த வழியாக வந்த சிறப்பு ரயிலை புளியறை பகுதியை சோ்ந்த சண்முகையா, அவரது மனைவி வடக்குத்திஅம்மாள் இருவரும் டாா்ச் லைட் அடித்து எச்சரித்து நிறுத்தினா். இதனால் நள்ளிரவு நேரத்தில் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இவா்களது செயலைப் பாராட்டி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கிப் பாராட்டினாா். இதனைத் தொடா்ந்து, பகவதிபுரம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீ வஸ்தவா, அத் தம்பதியைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் ரூ.20 ஆயிரம் வெகுமதி வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com