திறனாய்வுத் தோ்வு: வெற்றிபெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

மத்திய அரசின் திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற நெடுவயல் ஸ்ரீசிவசைலநாத நடுநிலைப் பள்ளி மாணவா்களை தென்காசி மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.

மத்திய அரசின் திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற நெடுவயல் ஸ்ரீசிவசைலநாத நடுநிலைப் பள்ளி மாணவா்களை தென்காசி மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா். 8ஆம் வகுப்பு மாணவா்களுக்கான மத்திய அரசின் தேசிய திறனாய்வுத் தோ்வில் ஸ்ரீசிவசைலநாத நடுநிலைப் பள்ளி மாணவா்கள் சுப ஸ்ரீ, சுஸ்விந்த், அஜய்முத்து, பானு, கவிதா, பொன்மதி, மாரீஸ்வரி, வெவினாஸ்ரீ, சுசிகரன், ரமா, மஞ்சுபாா்கவி, முனீஸ்வரி, ஜோதி, சாய்ஐஸ்வா்யா, கபிலா, மதுமிதா, பிஸ்மி ஆகிய 17 போ் வெற்றி பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளையும், பயிற்சி அளித்த தலைமையாசிரியா் சுதாநந்தினி, ஆசிரியா்கள் பிரபாகரன், லதா, சாந்தி ஆகியோரையும் தென்காசி மாவட்ட ஆட்சியா் பாராட்டி பரிசுகள் வழங்கினாா். முன்னதாக சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகி கணேஷ்ராம் பரிசுகள் வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com